உங்கள் வாக்குகள் மேலும் ஒரு தமிழ்ப் பெண்ணை ஏற்றிவிடட்டும்.
கனடா முழுவதுமுள்ள பெண்கள் ஆர்வத்துடன் பங்கேற்றுள்ள இந்தப்
போட்டியில் தமிழரான டயானாவும் போட்டியிடுகிறார்.
உங்கள் வாக்குகள் மேலும் ஒரு தமிழ்ப் பெண்ணை ஏற்றிவிடட்டும்.
கனடா முழுவதுமுள்ள பெண்கள் ஆர்வத்துடன் பங்கேற்றுள்ள இந்தப்
போட்டியில் தமிழரான டயானாவும் போட்டியிடுகிறார்.
இந்தோனேசியாவைச் சேர்ந்த ஒருவர் கோவிட் தொற்றை மறைத்துப் பயணம் செய்ய புதிய வழியத் தெரிவு செய்துள்ளார். தொற்றுக்குள்ளான நிலையில் வீட்டில் தனிமைப்படுத்தப் பட்டிருந்த ஒருவர் மாறுவேடத்தில் பயணம் மேற்கொண்டு தற்போது விசாரணைகளை எதிர் கொள்கிறார்.
ஈத் விடுமுறையில் பயணம் மேற்கொள்ளவேண்டும் என்பதற்காகத் தனது மனைவியின் கடவுச் சீட்டைப் பயன்படுத்திப் பயணித்ததோடு முகம் மற்றும் உடலை மூடும் புர்கா அணிந்து விமான நிலைய அதிகாரிகளை ஏமாற்றி விமானத்தினுள் சென்றிருக்கிறார். அத்துடன் கோவிட் தொற்று இல்லை என்பதைக் காண்பிக்கும் வகையில் தனது மனைவியின் சான்றிதழையும் அவர் பயன்படுத்தியுள்ளார்.
விமானத்தின் உள்ளே சென்ற அவர் பின்னர் வேறு உடைக்கு மாறியதை அவதானித்த பணிப்பெண் இது பற்றி முறையிட்ட பின்பே அவர் கண்டு பிடிக்கப்பட்டுக் கைதாகினர்.
தடுப்பூசி செலுத்தப்பட்ட ஆவணம் உட்பட அவர் கொண்டு சென்ற ஆவணங்கள் அத்தனையும் மனைவியுடையது என்று காவல்துறைத் தலைமை அதிகாரி Aditya Laksimada கூறினார். தற்போது அவர் வீட்டில் தனிமைப் படுத்தப்பட்டுள்ளதுடன் விசாரணைகள் நடத்தப்படுவதாக அதிகாரிகள் கூறுகிறனர்.
இந்தோனேசியாவில் ஒரு நாளில் ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்ட தொற்றுகள் பதிவாகி வருகின்றமை குறிப்பிடத் தக்கது.
கடந்த 2015 ஆம் ஆண்டு தொடக்கம் 2019 ஆம் ஆண்டு வரையான காலப் பகுதியில் 'ரிஷாட் பதியுதீன்' இன் வசிப்பிடத்தில் பணி புரிந்த ஒரு பெண் பாலியல் பலாத்காரத்துக்குள்ளானதாக வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
முன்னாள் அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவருமான 'ரிஷாட் பதியுதீன்' இன் இல்லத்தில் பணிபுரிந்துவந்த 16 வயதுச் சிறுமி கிருஷாலினியின் சாவிலுள்ள மர்மம் குறித்துத் தற்போது பெரும் பரபரப்பாகப் பேசப்படுகிறது.
பல்வேறு தரப்புகளால் கொடுக்கப்படும் அழுத்தங்களுக்கு மத்தியில் இந்தச் சம்பவம் பெரும் கவனம் பெற்றுள்ளது. இலங்கைக் காவல்துறை இதுவரை 20 வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளதாக ஊடகப் பேச்சாளர் 'அஜித் ரோஹண' கூறியுள்ளார்.
அவற்றில் இரண்டு வாக்கு மூலங்கள் 'ரிஷாட் பதியுதீன்' இன் இல்லத்தில் முன்னர் பணியாற்றிய இரண்டு பெண்களிடம் பெறப்பட்டிருந்தது. இவர்கள் ஷங்கர் என்று அழைக்கப்படும் 'பொன்னையா பண்டாரம்' என்பவரால் முன்னாள் அமைச்சரின் இல்லத்தில் பணியில் சேர்க்கப்பட்டிருந்தனர்.
அதில் தற்போது டயகம என்ற ஊரில் வசித்துவரும் 22 வயதான பெண் அளித்துள்ள வாக்கு மூலத்தில் முன்னாள் அமைச்சர் ரிஷாட் இன் மைதுனரான 44 வயது 'சிஹாப்டீன் இஸ்மதீன்' தன்னை வல்லுறவுக்குட்படுத்தியதாகத் தெரிவித்திருந்தார். இந்தப் புகாரை அடுத்து இஸ்மதீன் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப் படுத்தப்பட்டதாக இலங்கைக் காவல் துறை கூறியுள்ளது.
எலன் மஸ்க்
உலகத்தில் எல்லாவற்றையும் மாற்ற நினைக்கும் மனிதர்.
மின்சாரத்திலியங்கும் கார்களைத் தயாரித்தவர். விண்வெளிக்கு ரொக்கட் செலுத்தியவர். செலுத்தியதை மீண்டும் பக்குவமாகத் தரையில் இறக்கிக் காட்டியவர். ஆயிரக் கணக்கில் செய்மதிகளை விண்ணுக்கு அனுப்பி உலகம் முழுவதும் இணைய இணைப்பை வழங்க ஆரம்பித்தவர். போக்குவரத்து நெரிசலைக் குறைக்க ஹைப்பர் லூப் திட்டம் வைத்திருப்பவர். சுரங்கம் அமைத்துப் பாதைகளை அமைப்பவர். செவ்வாயில் மனிதர்களைக் குடியேற்ற நினைப்பவர். இப்போது மனித மனங்களை அறிய நினைக்கிறார்.அவருடைய திட்டங்களில் ஒன்றான நியூர லிங்க் Neuralink
திட்டம் இதுதான்
மண்டையைத் திறந்து உள்ளே ஒரு கம்ப்யூட்டர் வைத்துத் தைக்கப்படும்.
மூளை நினைப்பது வெளியில் உள்ள கம்ப்யூட்டர் இற்கு வரும்.
இது வெறும் எண்ணக்கருவாக மட்டும் இருப்பதல்ல. நடைமுறையிலும் வந்துவிட்டது. இந்த வாரம் வெளியிடப்பட்ட வீடியோ ஒன்றில் ஒரு குரங்கு pong விளையாடுகிறது. அதனுள் பொருத்தப்பட்டுள்ள கருவி விளையாட்டைத் தொடர்ந்து விளையாடுகிறது.
முதலில் ஒரு joystick இல் குரங்கு விளையாடாத் தொடங்குகிறது. அதற்குப் பரிசாக வாழைப் பழக் கூழ் வழங்கப் படுகிறது.
பின்னர் அந்த joystick இணைப்புத் துண்டிக்கப்பட்ட குரங்கின் மூளையிலிருந்து வரும் சமிக்ஞைகள் விளையாட்டைத் தொடரச் செய்கின்றன.
இது போன்று எதிர்காலத்தில் மனிதர்களுக்குப் பொருத்தப்படும் கருவிகள் மூலம் இயங்க முடியா நிலையில் உள்ளவர்களையும் இயங்க வைக்க முடியும் என்று நம்புகிறார் எலன் மஸ்க்.
நினைவு ஒன்று மட்டுமே போதும் உங்களுக்கு வேண்டிய செயல்களைச் செய்ய வேண்டிய கருவிகள் கொண்டு அவற்றைச் செய்து முடிக்கலாம்.
இதற்காக மூளையின் மேற்புறப் படையில் சிறிய பகுதி வெட்டப்பட்டு ஒரு chip வைக்கப்படும். அது மூளைக்குள் நடக்கும் சிந்தனையாற்றலின் மின் தூண்டல்களைக் கிரகித்து Bluetooth வழியே வெளியே அனுப்பும். அனுப்பப்படும் தகவல்களைக் கொண்டு கணனிகள் மூலம் செயல்கள் நடைபெறும்.
எதிர்காலத்தில் Bluetooth இற்குப் பதிலாக வேறு வகை சமிஞைகளைப் பயன்படுத்தலாமா என்று ஆராயப்படும். அத்துடன் உள்ளே பொருத்தப்பட்ட கணினிக்கு மின்சாரம் Bluetooth வழியே அனுப்பப்பட்டு மின்னேற்றப்படும். எதிர்காலத்தில் இரண்டு மனிதர்கள் வாய் மொழியாகப் பேசாமலே மனதில் நினைப்பதன் மூலம் தகவல்களை பரிமாறிக் கொள்ள முடியும்.
அத்துடன் மூலையில் பொருத்தப்பட்டுள்ள கணினி மூலையில் ஏற்படும் மாற்றங்கள் போன்ற பல செய்திகளையும் பரிமாறுவதால் மாரடைப்பு மற்றும் பல நோய் அறிகுறிகளை முன்கூட்டியே எச்சரிக்கை மூலம் அறிந்துகொள்ளலாம்.
அது மட்டுமே நினைவுகளை தரவேற்றி மீண்டும் தரவிறக்கம் செய்யும் வசதியும் இதன் மூலம் கிடைக்கப் போகிறது. அது இயந்திரத்திற்காகவும் இருக்கலாம் மூளைக்காகவும் இருக்கலாம்.
பிக் பொஸ் அதிகப் பேரால் உலகம் முழுவதும் பார்க்கப்படும் நிகழ்ச்சி.
இந்தியாவில் Big Boss என்ற பெயரில் ஒளிபரப்பானாலும் வெளிநாடுகளில் Big Brother ஆகவே ஒளிபரப்பாகிறது.
தமிழில் Big Boss நான்கு நிகழ்ச்சிகள் கடந்து விட்டது. திரை நடிகர்களை விட அதிக புகழையும் பலர் அறியும் வண்ணமும் போட்டியாளர்கள் ஒவ்வொரு இரசிகர்களுக்கும் தெரியப்படுத்தப்படுவதால் பலரும் இந்தப்போட்டியில் கலந்துகொள்ள ஆர்வம் காட்டுகிறார்கள்.
இந் நிகழ்ச்சியில் முக்கிய பாத்திரம் Big Boss குரல். முகம் காட்டாது போட்டியாளர்களுக்கு விதி முறைகளை அறிவிப்பதாயினும் சரி அவர்களோடு அளவளாவினாலும் சரி அந்தக் குரல் மட்டுமே போடடியாளர்களின் கனவுக் குரல்.
போட்டி நிறைவடையும்போது உங்களிடமிருந்து குரல் வழியாக விடைபெறுகிறேன் என்று கூறி பார்ப்பேரையும் கலங்க வைக்கும் அந்தக் குரல்.
தமிழ் Big Boss நிகழ்ச்சியில் அந்தக் குரலுக்குச் சொந்தக்காரர் யார் என்பது பலராலும் தேடப்பட்டுவந்த நிலையில் அவர் குரலில் வெளியான வீடியோ அவரை வெளியுலகிற்குக் காட்டியுள்ளது. இதோ அந்த Big Boss குரல் நாயகன்.
கனடாவில் TD வங்கி வாடிக்கையாளர்கள் இலக்குவைக்கப்படும் புதிய வஞ்சித்தல் முயற்சி குறித்த செய்தி வெளியாகியுள்ளது.
கனடாவின் பல மாகாணங்களிலுள்ள பொதுமக்களின் TD வங்கிக் கணக்கிலிருந்து வஞ்சகமான முறையில் பணம் திருடப்படுவதாகச் சொல்லப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து TD வங்கியும் DOORDASH நிறுவனமும், விசாரணைகள ஆரம்பித்துள்ளன.DOORDASH நிறுவனம் உணவு விநியோக நடவடிக்கைகளில் கொடிகட்டிப் பறக்கும் நிலையில் அதன்பேரில் இந்த வஞ்சனை நடைபெற்றுவருகிறது. இதில் கவனிக்கத்தக்கவேண்டிய விடயம் இதுவரை DOORDASH சேவைகளைப் பயன்படுத்தாத பலரின் வங்கிக் கணக்கிலிருந்து பணம் களவாடப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. எனவே உங்கள் வங்கிக் கணக்கில் நடைபெற்றுள்ள பணப் பரிமாற்றங்களை அவதானமாகப் பரிசோதிக்க வேண்டும். குறிப்பாக TD வங்கி கணக்குவைத்திருப்போர் தங்கள் கணக்குகளில் இடம்பற்றுள்ள சந்தேகத்துக்குரிய பண மீளப்பெறல்கள் பற்றி கவனிக்கவேண்டியுள்ளது.
இதுவரை TD வங்கியோ DOORDASH நிறுவனமோ இந்தக் குற்றம் எவ்வாறு நடந்தது என்பது குறித்துக் கருத்து வெளியிடவில்லை.இதேநேரம் அமெரிக்காவில் பல்வேறு வங்கிகளின் வாடிக்கையாளர்கள் இதுபோன்ற வஞ்சனைக்கு முகம் கொடுத்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு வங்கியால் பணம் மீளளிக்கப்பட்டுள்ளதாயினும் அதற்குச் சில வாரங்கள் எடுத்ததாக வாடிக்கையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
கனடாவில் இதுவரை TD வங்கி வங்கி வாடிக்கையாளர்கள் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளது. கனடாவில் TD வங்கி ஒரு கோடியே 35 இலட்சத்திற்கும் அதிகமான வாடிக்கையாளர்களைக் கொண்டிருக்கிறது.
தற்போதுள்ள DEBIT CARD அட்டைகள் வெறுமனே வங்கி நடவடிக்கைகள் மட்டுமன்றி இணையவழிப் பொருட் கொள்வனவுகளுக்கும் பயன்படுத்த முடியும் என்பதாலேயே இந்தத் திருட்டுக்கு வழியேற்பட்டுள்ளது.
உங்களது வங்கியால் வழங்கப்படும் DEBIT CARD அட்டைகள் இணைய வழிப் பொருட்கொள்வனவுக்கு உடன்படவேண்டுமா இல்லையா என்பதை நீங்களே முடிவு செய்யும் வசதிகளை வங்கி வழங்குகிறது. எனவே உங்கள் வங்கிக் கணக்கு வஞ்சகர் வலைக்குள் சிக்காதிருக்க வங்கியுடன் தொடர்பு கொண்டு உங்கள் விருப்பத்தேர்வை உறுதிப்படுத்தலாம்.
yup... $438 charge on my TD Account in early January and i don't have a Doordash App 👎 https://t.co/nB8vqkP6QI
— Steve Lacroix 🇨🇦 (@ItzMeSteve) January 28, 2021
சந்து பொந்துக்குள் நுழைந்து சென்று மூக்கைப் பொத்தவைக்கும் இடம் ஒன்றில் அறிமுகமில்லாத ஒருவரிடம் பணத்தைக் கொடுத்து அவர் தருவதைப் பெற்றுச் செல்லும் த்ரில் நிறைந்த கஞ்சா வாங்கும் வழக்கம் மலையேறிவருகிறது.
ஒரு அப்பிள் போன் வாங்குவதுபோல அழகான விற்பனை நிலையத்தில் உத்தரவாதத்துடனும் அரச அங்கீகாரத்துடனும் கஞ்சா வாங்கலாம் கனடாவில்.
கடந்த 2017 ஆம் ஆண்டு கனடாவில் கஞ்சா விற்பதை அனுமதிக்கும் சட்டம் கொண்டுவரப்பட்டது. 2018 ஜூன் மாதம் தொடக்கம் கனடாவின் அனைத்துப் பகுதிகளிலும் அனுமதிபெற்ற முகவர்கள் கஞ்சா விற்கமுடியும் என அறிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து ஆர்வத்துடன் பலர் இந்த விற்பனை நிலையங்களை ஆரம்பிக்க விண்ணப்பித்திருந்தனர். கனடாவின் பிரபலமான வர்த்தகத் தலை நகர் டொரண்டோ அமைந்துள்ள ஒண்டாரியோ மாகாணம் முதற் கட்டமாக குலுக்கல் முறையில் 25 பேரைத் தெரிவு செய்து அவர்கள் கடைகளை ஆரம்பிக்க அனுமதியளித்தது.
வழங்கப்பட்ட காலக் கெடுவுக்குள் கடைகளை ஆரம்பிக்க முடியாமல் போன வர்த்தகர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது தனிக் கதை.
தற்போதைய காலகட்டத்தில் பெருகிவரும் கஞ்சா விற்பனை நிலையங்கள் மெருகூட்டப்பட்ட வடிவமைப்பில் வாடிக்கையாளரைக் கவரும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளன. அதில் ஒன்று டொரண்டோவில் அமைந்துள்ள அழகிய கஞ்சாக் கூடம் இங்கு நீங்கள் படத்தில் காண்பது.