Subscribe:

கெட்ட வார்த்தை SMS இற்குத் தடை

நீங்கள் பாகிஸ்தானில் வசிப்பவராயின் உங்களால் அனுப்பப்படும் குறுஞ்செய்திகளில் அக்கறையுடன் இருக்கவேண்டும். இல்லாவிட்டால் நீங்கள் அனுப்பும் செய்தி மறுமுனைக்குச் சென்று சேராது.

பாகிஸ்தானில் குறுஞ்செய்திகளில் ஆபாசமான வார்த்தைப் பிரயோகங்களைத் தடை செய்யுமாறு அந்நாட்டிலுள்ள தொலைபேசி நிறுவனகளுக்கு ஊடகத்துறை அமைச்சு அறிவுறுத்தியுள்ளது. இதற்காகத் தடை செய்யப்படவேண்டிய 1.500 சொற்களையும் பட்டியலிட்டு அனுப்பியுள்ளது.

உருது, மற்றும் ஆங்கிலத்தில் உள்ள இச் சொற்களைக் கொண்ட குறுஞ்செய்தி அனுப்பப்படுமிடத்து அது தடை செய்யப்படும் என்று தெரிய வருகிறது. ஆயினும் பட்டியலிடப் பட்டுள்ள இத்தனையும் கெட்ட வார்த்தைகள்தானா என்ற சந்தேகம் பலருக்கும் எழுந்துள்ளது.

உண்மையில் வேறு மதங்களைச் சார்ந்த சொற்களும் இதனுள் அடக்கம் என்று கிசு கிசுக்கப் படுகிறது. உதாரணமாக Jesus Christ போன்றவையும் இதனுள் அடங்கலாம் என்று கூறப் படுகிறது.

ஏலவே இஸ்லாமியக் கருத்துகளுக்கு எதிரானவை என்று அவ்வப்போது பல இணையத்தளங்கள் பாகிஸ்தானில் முடக்கப்படுவது நடந்துவரும் நிலையில் புதிதாக இந்தத் தடை குறித்து அறிவிக்கப் பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கருத்துக்கள்..