Subscribe:

Search Engine இலிருந்து Car Engine வரை

கூகிள் நிறுவனம் ஆளில்லாக் கார்களை உருவாக்கும் முயற்சியைத் தொடங்கியிருக்கிறது.

காரோட்டும் வேலையை மேலும் பாதுகாப்பானதாக மாற்றுவதே இதன் நோக்கம் என்று கூகிள் நிறுவனம் கூறுகிறது.

கூகிள் நிறுவனம், இந்தத் தொழில் நுட்பத்தை உருவாக்கும் முயற்சியில், கார்களை மாற்றியமைத்து, சுமார் 10 லட்சம் கிலோமீட்டர்கள் ஆளில்லாத நிலையில் ஓட்டிப் பார்த்துப் பரிசோதித்திருக்கிறது.

சுமார் நூறு தானியங்கிக் கார்களை உருவாக்க கூகிள் திட்டமிடுகிறது.
இது போன்ற கார்களில் ஸ்டியரிங் அல்லது பெடல்களோ இருக்காது. காரை நிறுத்துவதற்கும், ஓட்ட ஆரம்பிப்பதற்குமான பொத்தான்கள் மட்டுமே இருக்கும்.
அண்மையில் இதன் பரிசோதனை ஓட்டம் பொது மக்களை அமர வைத்து நடை பெற்றது. முதியவர்கள் மற்றும் சிறார்களை இத் தொழில் நுட்பம் கவர்ந்திருக்கிறது. குறிப்பாக வாகன ஓட்டிகள் இனி அதிக ஓய்வு நேரத்தைப் பெறுவர்.

No comments:

Post a Comment

கருத்துக்கள்..